டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக விலகும் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள்!

Updated: Wed, Oct 19 2022 13:35 IST
Image Source: Google

டி20 உலகக் கோப்பையின் தகுதிச்சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களில் 1 வெற்றியைப் பெற்று நெதர்லாந்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நிலைமையில் உள்ளது. 

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் தனது கடைசி ஓவரை வீசியபோது காயமடைந்தார்  வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா. இதையடுத்து டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து துஷ்மந்தா சமீரா விலகியுள்ளார். மேலும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான பிரமோத் மதுஷன், காயம் காரணமாக நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவருடைய காயம் ஒரு வாரத்தில் சரியாகிவிடும் எனத் தெரிகிறது. இதையடுத்து இலங்கை அணியின் மாற்று வீரர்களாக மேலும் சில வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளார்கள். 30 வயது துஷ்மந்தா சமீரா இலங்கை அணிக்காக 12 டெஸ்டுகள், 42 ஒருநாள், 52 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

அதேபோல் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாள ரீஸ் டாப்லி, பாகிஸ்தானுடனான பயிற்சி போட்டியின் போது காயமடைந்துள்ளார். அவரது காயம் தீவிரமடைந்துள்ள காரணத்தால் நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து டாப்லி விலகியுள்ளார்.

முன்னதாக அந்த அணியின் அதிரடி வீரர் ஜானி பேர்ஸ்டோவ் காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகிய நிலையில் தற்போது டாப்லியும் விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் இடியாக அமைந்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை