அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. அதேசமயம் இத்தொடரில் வநிந்து ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணியானது அடுத்தடுத்து படுதோல்விகளைச் சந்தித்ததுடன் இந்த தொடரின் லீக் சுற்றுடன் வெளியேறியது. 

Advertisement

இதனையடுத்து அணியின் ஆலோசகர் முன்னாள் வீரர மஹிலா ஜெயவர்த்னே மற்றும் அணியின் தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் ஆகியோர் தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்டு தங்கள் பதவியில் இருந்து விலகினர். இதன் காரணமாக புதிய பயிற்சியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியம் தள்ளப்பட்டுள்ளது. 

Advertisement

இந்நிலையில் இலங்கை அணியானது இம்மாத இறுதியில் இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்கவுள்ளது. இதன் காரணமாக இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யா தேர்வுசெய்யப்பட்டுள்ளார். மேற்கொண்டு அவர் எதிர்வரவுள்ள இங்கிலாந்து தொடர் வரை  அவர் இப்பதவியில் நீடிப்பார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தோல்வி எதிரொலியாக இலங்கை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அந்த அணியின் நட்சத்திர வீரர் வநிந்து ஹசரங்கா விலகுவதாக அறிவித்துள்ளார்.இலங்கை கிரிக்கெட்டின் நலனைக் கருத்தில் கொண்டு கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும், தொடர்ந்து ஒரு வீரராக அணிக்கு தனது பங்களிப்பை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்கொண்டு வநிந்து ஹசரங்கா கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் அவரது முடிவை இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளது. இலங்கை அணியின் முக்கிய வீரராக தொடர்ந்து அவர் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய அணிக்கு எதிரான தொடரில் இலங்கை அணியின் புதிய கேப்டன் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News