NZ vs IND: ரிஷப் பந்தின் பேட்டிங்கை விமர்சித்த ஸ்ரீகாந்த்!

Updated: Mon, Nov 28 2022 14:26 IST
Image Source: Google

இந்திய அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் ரோஹித், விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நிலையில், நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.  

இந்திய அணிக்கு ஸ்டாண்ட்-இன் கேப்டன் ஷிகர் தவான் (72), தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் (50), ஷ்ரேயாஸ் ஐயர் (80) ஆகியோர் முக்கியமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒரு போட்டியில், விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த் சொற்ப ரன்களுக்கு வெளியேறினார். 

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடரின் தொடக்க ஆட்டத்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 23 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் ரன்கள் அடிப்பதற்கு போராடிய பந்த், ஒயிட்-பால் கிரிக்கெட்டில் மோசமான பார்மில் இருந்து வருகிறார். யூடியூப்பில் நியூசிலாந்தில் பந்தின் ஆட்டத்தை பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட ஸ்ரீகாந்த், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பந்திற்கு ஓய்வு அளிக்குமாறு இந்திய சிந்தனைக் குழுவை வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், "நீங்கள் அவருக்கு ஒரு பிரேக் கொடுத்துவிட்டு, அணிக்கு திரும்புங்கள் என்று சொல்லலாம், ரிஷப் பந்தை அணி நிர்வாகம் சரியாகக் கையாளவில்லை. ஆம், ரிஷப் பந்த் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தவில்லை. நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். இந்த வாய்ப்புகளை நீங்கள் குழப்பிக் கொள்கிறீர்கள். 

இதுபோன்ற போட்டிகளில் நீங்கள் அடித்து நொறுக்கினால், அது நன்றாக இருக்குமா? உலகக் கோப்பை வரப்போகிறது. ஏற்கனவே நிறைய பேர் பந்த் ரன் அடிக்கவில்லை, என்று கூறி வருகின்றனர். அவர் தனக்குத்தானே அழுத்தம் கொடுக்கப் போகிறார். அவர் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அவர் ஏதாவது சரியாகச் செய்ய வேண்டும், சிறிது நேரம் நின்று விளையாடுங்கள்" என்று ஸ்ரீகாந்த் கூறினார். 

ஒருநாள் போட்டிக்கு முன்பு, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பந்த் இரண்டு போட்டிகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஃபார்மில் இல்லாத பந்த் டி20 போட்டிகளில் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை