டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ஆஸ்திரேலியாதான் சிறந்த அணியாக விளங்கும் - நாதன் லையன்!

Updated: Mon, Jun 27 2022 18:38 IST
Star spinner Nathan Lyon backs Australia to become best Test team in the world (Image Source: Google)

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 3 டி20, 5 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை ஆஸ்திரேலிய அணியும், ஒருநாள் தொடரை இலங்கை அணியும் வென்றது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை (ஜூன் 28) முதல் தொடங்குகிறது. இதில் பாட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணியும், திமுத் கருணரத்னே தலைமையில் இலங்கை அணியும் விளையாடுகின்றன.

மேலும் இது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடராக நடைபெறவுள்ளதால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ஏனெனில்தற்போது ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியா அணி  முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் நாதன் லையன், ஆஸ்திரேலியா சிறந்த டெஸ்ட் அணியாக விளங்கும் என தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ஆஸ்திரேலியாதான் சிறந்த அணியாக விளங்கும். சொல்வதற்கு திமிராக இருந்தாலும் இதுதான் உண்மை. உண்மையிலேயே நாங்கள் அதற்குத் தகுதியானவர்கள். ஏனெனில் அந்தளவுக்கு திறமை உள்ளது. மேலும் அதற்காக கடினமாக உழைத்து வருகிறோம். சிறந்த அணியாக மாறுவதற்கான பயணத்தில்தான் தற்போது இருக்கிறோம். அதுவே எங்களது அணியின் நோக்கமும்கூட” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை