ஈரப்பதத்தால் டாஸ் போடுவதில் தொடரும் தாமதம்- வெளியான முக்கிய அப்டேட்!

Updated: Fri, Sep 23 2022 20:25 IST
Start Of 2nd T20I between India & Australia Further Delayed; Next Inspection At 8.45 PM (Image Source: Google)

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே செப்டம்பர் 20ஆம் தேதி மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது செப்டம்பர் 23ஆம் தேதி இன்று நாக்பூர் மைதானத்தில் நடைபெற இருந்தது. வழக்கம் போல 6:30 மணிக்கு டாஸ் போடப்பட்டு 7 மணிக்கு போட்டி ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேலையில் இன்று நாக்பூர் நகரில் பலத்த மழை பெய்தது.

அதன் காரணமாக போட்டியானது டாஸ் போடுவதிலேயே தாமதம் ஏற்பட்டது. பின்னர் 7 மணிக்கு மைதான ரிப்போர்ட் வெளியாகிய பின்னர் மைதானத்தின் அவுட் ஃபீல்ட் ஈரப்பதமாக இருப்பதனால் 8 மணிக்கு மீண்டும் மைதானம் பரிசோதிக்கப்படும் என்றும் அதன் பிறகு போட்டி தொடங்குவது பற்றி அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த இரண்டாவது டி20 போட்டி துவங்குவதில் தற்போது கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளதால் நிச்சயம் இந்த இரண்டாவது டி20 போட்டியானது முழுவதுமாக நடைபெறாது என்றும் சில ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடைபெறலாம் என்ற முக்கிய மாற்றம் இந்த போட்டியில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன்படி தற்போது 8.45 மணிக்கு மீண்டும் மைதானம் பரிசோதனை செய்யப்படவுள்ளது. அப்போது மைதானம் விளையாடுவதற்கு ஏற்றவாறு இருந்தால் 5 ஓவர்களைக் கொண்ட போட்டியாக இது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 9.45 மணி வரைக்கும் ஆடுகளம் விளையாடுவதற்கு ஏற்றவாறு இல்லை என்றால், போட்டி கைவிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏற்கனவே இந்த தொடரின் முதலாவது போட்டியில் ஓய்வு காரணமாக விளையாடாமல் இருந்த பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பதால் இந்திய அணி இந்த போட்டியை கைப்பற்ற முனைப்பு காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை