இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்: டி20 கிரிக்கெட்டில் இரு அணிகளின் புள்ளி விவரங்கள்!

Updated: Tue, Feb 15 2022 20:10 IST
Image Source: Google

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று வருகிறது. இதில் முதலாவதாக கடந்த பிப்ரவரி 6ஆஆம் தேதியன்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் துவங்கிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 3 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்ற இந்தியா 3 – 0 என ஒயிட்வாஷ் பெற்றியை பதிவு செய்து கோப்பையை முத்தமிட்டது. 

அதன் வாயிலாக வரலாற்றிலேயே முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் வெற்றியை பதிவு செய்து புதிய சாதனையையும் இந்தியா படைத்தது.

இதை அடுத்து இந்த 2 அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கபதற்காக இரு அணி வீரர்களும் அங்கு தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி, கே எல் ராகுல், ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட் என பெரிய நட்சத்திர பட்டாளம் அடங்கிய தரமான இந்திய அணியும், கீரன் பொல்லார்ட் தலைமையில் ஷாய் ஹோப், பூரான், ஜேசன் ஹோல்டர் போன்ற அதிரடி காட்டடி மன்னர்கள் நிறைந்த வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதுவதால் இந்த தொடர் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஒருநாள் தொடரை போலவே இந்த தொடரையும் வெற்றி பெற்று சொந்த மண்ணில் தலைநிமிர்ந்து நடக்க இந்தியாவும் ஒருநாள் தொடரில் பெற்ற தோல்விக்கு இந்த டி20 தொடரில் பதிலடி கொடுக்க வெஸ்ட் இண்டீஸ் அணியும் போராடும் என்பதால் இந்த தொடர் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பொதுவாகவே ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி சொதப்புவது சகஜம் என்றாலும் டி20 கிரிக்கெட் என்று வந்துவிட்டால் அந்த அணி வீரர்கள் விஸ்வரூபம் எடுப்பார்கள். சொல்லப்போனால் அந்த அணியில் 11ஆவது இடத்தில் களமிறங்கும் வீரர் கூட கடைசி நேரத்தில் மெகா சிக்ஸர்களை பறக்கவிட்டு வெற்றிகளைப் பெற்றுத்தரக்கூடிய கூடியவர்களாக உள்ளனர். எனவே இந்த டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு மிகுந்த சவால் அளிக்கும் என நம்பலாம்.

வரலாற்று புள்ளிவிவரம்:

1. டி20 கிரிக்கெட்டில் பலமான 2 அணிகளாக கருதப்படும் இந்தியாவும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் வரலாற்றில் இதுவரை 17 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்தியா முன்னிலை வகிக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் 6 போட்டிகளில் மட்டுமே வென்றது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.

2. குறிப்பாக தொடர் நடைபெறும் இந்திய மண்ணில் இந்த 2 அணிகளும் வரலாற்றில் 7 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தியுள்ளன. அதில் 5 போட்டிகளில் வென்ற இந்தியா சொந்த மண்ணில் வலுவான அணியாக காணப்படுகிறது. மறுபுறம் வெஸ்ட்இண்டீஸ் 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது.

அதிக ரன்கள்:

இதுவரை டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக ரன்களை குவித்த டாப் 3 இந்திய வீரர்கள்,

1. ரோஹித் சர்மா : 519 ரன்கள் (15 இன்னிங்ஸ்)
2. விராட் கோலி : 501 (11 இன்னிங்ஸ்)
3. கேஎல் ராகுல் : 353 ரன்கள் (9 இன்னிங்ஸ்)

வெஸ்ட்இண்டீஸ் சார்பில் இந்தியாவுக்கு எதிராக அதிக டி20 ரன்கள் குவித்த வீரராக எவின் லெவிஸ் 322 ரன்களுடன் (8 இன்னிங்ஸ்) முதலிடத்தில் உள்ளார். 2ஆவது இடத்தில் கிரண் பொல்லார்ட் 292 ரன்களுடன் (10 இன்னிங்ஸ்) உள்ளார்.

அதிக அரை சதங்கள் & சதங்கள்:

வெஸ்ட்இண்டீஸ் எதிராக டி20 கிரிக்கெட்டில் அதிக அரை சதங்கள் அடித்த இந்திய வீரராக விராட் கோலி 5 அரைச் சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். 2ஆவது இடத்தில் ரோஹித் சர்மா 4 அரைசதங்களுடன் உள்ளார். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் இதுவரை ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய 2 இந்தியர்கள் மட்டுமே அதிகபட்சமாக தலா 1 சதம் அடித்துள்ளார்கள்.

அதேபோல இந்தியாவுக்கு எதிராக அதிக டி20 அரை சதங்கள் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்களாக பொல்லார்ட், லெண்டில் சிமன்ன்ஸ் மற்றும் சார்லஸ் பிராத்வைட் ஆகியோர் தலா 2 அரைச் சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்கள். 

மேலும் இந்தியாவுக்கு எதிராக டி20 சதம் அடித்த ஒரே வெஸ்ட் இண்டீஸ் வீரராக எவின் லெவிஸ் (1 சதம்) சாதனை படைத்துள்ளார்.

அதிக சிக்ஸர்கள்:

அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை பறக்கவிட்ட இந்திய வீரராக முதலிடத்தில் விராட் கோலி 48 சிக்ஸர்களுடன் சாதனை படைத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா 41 சிக்சர்களுடன் உள்ளார்.

வெஸ்ட்இண்டீஸ் சார்பில் அதிக சிக்சர்களை பறக்கவிட்ட வீரர்களாக முதல் இடத்தில் எவின் லூவிஸ் 28 சிக்சர்களுடன் 2ஆவது இடத்தில் பொல்லார்ட் 26 சிக்சர்களுடன் உள்ளார்கள்.

அதிக விக்கெட்கள்

டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக டி20 விக்கெட்டுகள் எடுத்த இந்திய பந்துவீச்சாளராக ரவீந்திர ஜடேஜா 9 விக்கெட்டுகளுடன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அதேபோல் அந்த அணிக்கு எதிராக இதுவரை எந்த ஒரு இந்திய வீரரும் 5 விக்கெட் எடுத்ததில்லை.

அதிகபட்ச ஸ்கோர்

தேபோல் டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வரலாற்றில் இந்தியா தனது அதிகபட்ச ஸ்கோராக கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த டி20 போட்டியில் 244/4 ரன்களை பதிவு செய்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை