டி20 உலகக்கோப்பைக்கு காத்திருக்கும் ஃபிஞ்ச், ஸ்மித்!
ஆஸ்திரேலிய அணியின் முக்கிய தூண்களாக விளங்குபவர்கள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் மற்றும் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்.
இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் போது காயமடைந்த ஸ்டீவ் ஸ்மித், வெஸ்ட் இண்டீஸ், வங்கதேச அணிகளுடனான தொடரிலிருந்து விலகி ஓய்வில் இருந்து வருகிறார்.
அதேசமயம் ஆரோன் ஃபிஞ்ச் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டி20 தொடரின் போது கை விரலில் காயமடைந்து, அந்த அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் வங்கதேச தொடரிலிருந்து விலகினார்.
இதற்கியிடையில் தற்போது காயத்திலிருந்து குணமடைந்து வரும் இருவரும், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்காக தயாராகி வருகின்றனர்.
இதுவரை ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஐந்து முறை கோப்பையை கைப்பற்றியுள்ள ஆஸ்திரேலிய, டி20 உலகக்கோப்பையை இதுநாள் வரை வென்றதில்லை. இதனால் இந்த முறையாவது டி20 உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்லவேண்டும் என்று முனைப்புடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.