தொடக்க வீரராக களமிறங்கும் ஸ்டீவ் ஸ்மித்; உறுதிசெய்த ஆஸ்திரேலியா!

Updated: Tue, Jan 09 2024 12:01 IST
தொடக்க வீரராக களமிறங்கும் ஸ்டீவ் ஸ்மித்; உறுதிசெய்த ஆஸ்திரேலியா! (Image Source: Google)

சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா அணி முழுமையாக கைப்பற்றியது. இந்த தொடருடன் ஆஸ்திரேலியாவின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இதையடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் அவருடைய இடத்தை நிரப்பப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அந்நாட்டு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் அணி நிர்வாகம் விரும்பினால் தாம் துவக்க வீரராக விளையாடுவதற்கு தயாராக இருப்பதாக ஸ்டீவ் ஸ்மித் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினால் சிறப்பாக விளையாடி பிரைன் லாராவின் 400 ரன்கள் உலக சாதனையை முறியடிப்பதற்கு வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக ஸ்டீவ் ஸ்மித்தை களமிறக்க ஆஸ்திரேகிய கிரிக்கெட் வாரியம் முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்று மற்றும் நான்காம் இடத்தில் களமிறங்கியுள்ள ஸ்டீவ் ஸ்மித் 106 போட்டிகளில் விளையாடி 32 சதங்களுடன் 9,514 ரன்களை குவித்துள்ளார். 

 

மேலும் பிக் பேஷ் லீக் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடிவரும் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க வீரராக செயல்பட்டு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் கேமரூன் க்ரீன், டிராவிஸ் ஹெட் போன்ற தொடக்க வீரர்கள் இருக்கும் நிலையில், ஸ்டீவ் ஸ்மித்திற்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுவது ரசிகர்களிடையே குழப்பத்தை வரவழைத்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை