டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஸ்டெய்ன்!
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதிக்கொள்வதால் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்நோக்கியிருந்த நிலையில், டி20 உலக கோப்பையில் இரு அணிகளும் மோதுகின்றன.
வரும் 23ஆம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இந்த போட்டி குறித்து பலரும் கருத்து கூறிவருகின்றனர். அந்தவகையில், பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியின் ஆடும் லெவனை முன்னாள் வீரர்கள் பலரும் தேர்வு செய்துவரும் நிலையில், டேல் ஸ்டெய்னும் தேர்வு செய்துள்ளார்.
தொடக்க வீரர்கள் - ரோஹித் சர்மா, ராகுல். 3ஆம் வரிசையில் கோலி, 4ஆம் வரிசையில் சூர்யகுமார் யாதவ், விக்கெட் கீப்பர் - ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோரையும், ஸ்பின்னர்களாக ஜடேஜா, ராகுல் சாஹர், வருண் சக்கரவர்த்தி ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ள டேல் ஸ்டெய்ன், வேகப்பந்து வீச்சாளர்களாக ஷமி மற்றும் பும்ரா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார்.
டேல் ஸ்டெய்ன் தேர்வு செய்த இந்திய அணி:
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ஷமி, பும்ரா, ராகுல் சாஹர், வருண் சக்கரவர்த்தி.