ஆஷஸ் தொடர்: 17 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு உலக கோப்பைக்கு நிகரான முக்கியமான தொடர் ஆஷஸ் டெஸ்ட் தொடர். 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் இரு அணிகளுக்கும் இடையே களத்தில் அனல் பறக்கும். இரு அணிகளுமே ஆஷஸ் தொடரை வெல்ல கடுமையாக போராடும்.
அதன்படி 2019 ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. அந்த தொடர் டிராவில் முடிந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் நடக்கும் 2021-2022 ஆஷஸ் தொடரை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் உள்ளன.
ஆஷஸ் தொடருக்கான 17 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் முழங்கை காயம் காரணமாக இந்த அணியில் இடம்பெறவில்லை. பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட்டிலிருந்து தற்காலிக ஓய்வில் இருப்பதால் அவரும் அணியில் இடம்பெறவில்லை. காயம் காரணமாக ஐபிஎல்லில் இருந்து பாதியில் வெளியேறிய சாம் கரனும் ஆஷஸ் தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை.
பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய மேட்ச் வின்னர்கள் ஆடாதது கண்டிப்பாக இங்கிலாந்து அணிக்கு பெரிய பாதிப்பாக அமையும். இருப்பினும் ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகிய அனுபவ வீரர்கள் இருப்பது அணிக்கு சற்று பலத்தை கூட்டியுள்ளது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இங்கிலாந்து அணி: ஜோ ரூட்(கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, டோமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஜாக் க்ராவ்லி, ஹசீப் ஹமீத், டேனியல் லாரன்ஸ், ஜாக் லீச், டேவிட் மலான், க்ரைக் ஓவர்டன், ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், கிறிஸ் வோக்ஸ், மார்க் உட்.