ரோஹித்துடன் கோலி தொடக்கம் தரவேண்டும் - சுனில் கவாஸ்கர்!

Updated: Mon, Sep 13 2021 14:25 IST
Image Source: Google

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கவுள்ள நிலையில், விராட் கோலி தலைமையிலான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில், விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), இஷன் கிஷன்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோருடன், ரிசர்வ் வீரர்களாக ஷ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், டி20 உலக கோப்பையில் ரோஹித் சர்மாவுடன் கேப்டன் விராட் கோலியே தொடக்க வீரராக இறங்க வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய கவாஸ்கர், “கோலி தொடக்க வீரராக இறங்கினால், இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கிடைப்பது உறுதி. அதுமட்டுமல்லாது அவர் தொடக்க வீரராக இறங்குவதன் மூலம், 3ஆம் வரிசையில் சூர்யகுமார் இறங்கமுடியும்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ராகுல் 4ஆம் வரிசையில் ஆடலாம். ஆட்டத்தின் சூழலை பொறுத்து ராகுல் - ரிஷப் பந்த் - ஹர்திக் பாண்டியா ஆகிய மூவரில் ஒருவர் 4ஆம் வரிசையில் களமிறக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை