பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்தது முட்டள்தனாமான முடிவு - கவாஸ்கர் விமர்சனம்!
இந்திய அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. தொடரின் முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்திடம் படு தோல்வியைத் தழுவியது. இதனையடுத்து, இந்திய அணி அடுத்ததாக அஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.
அதன்படி ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது வரும் நவம்பர் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. கடும் நெருக்கடிக்கு மத்தியில் இந்திய அணி இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய அணி பங்கேற்க இருந்த பயிற்சி போட்டியை பிசிசிஐ ரத்து செய்வதாக அறிவித்தது, பெரும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் பிசிசிஐ-ன் இந்த முடிவை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்திய கிரிக்கெட்டின் நலனுக்காக, பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்து, ஆஸ்திரேலிய லெவன் அணிக்கு எதிராகை இரண்டு நாள்கள் கொண்ட போட்டியை நடத்த திட்டமிட்டது சரியான முடிவு என்று நான் நம்புகிறேன். நியாயமாகச் சொல்வதானால், பெங்களூரில் நடந்த இரண்டாவது இன்னிங்ஸில் (முதல் டெஸ்ட்) இந்தியா 400 ரன்களுக்கு மேல் எடுத்தனர்.
ஆனால் அதன் பிறகு, நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அவர்கள் சுழற்பந்து வீச்சாளர்களூக்கு எதிராக செயல்படமுடியாமல் தடுமாறினர். அதிலும் குறிப்பாக கடைசி டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்சில் இந்தியாவால் 150 ரன்களைக் கூட துரத்தி வெற்றியைப் பெறமுடியவில்லை. அந்த ஆடுகளம் விளையாட கடினமானது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் அதில் விளையாடவே முடியாது என்பதனை என்னால் ஏற்கமுடியாது.
இந்நிலையில் நீங்கள் இந்திய ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்திருப்பது முட்டள்தனாமான முடிவாகும். ஏனெனில் பேட்டர்கள் களத்தில் இறங்கி பந்தை பேட்டின் நடுப்பகுதியில் எதிர்கொள்ளும் சிறந்த உணர்வை, வலை பயிற்சிகளில் உங்களால் பெற முடியாது. வலைப்பயிற்சியில் நீங்கள் எவ்வளவு நேரம் பயிற்சி செய்தாலும், அது உங்களுக்கு களத்தில் செயல்படுவது போன்ற உணர்வையும், பலனையும் கொடுக்காது.
Also Read: Funding To Save Test Cricket
பயிற்சி போட்டிகளின் போது சில முக்கிய பேட்டர்கள் காயத்தை சந்திப்பதற்கும் வாய்ப்புள்ளது. ஆனால் வலைப்பயிற்சி செய்யும் போதும் அதற்கான வாய்ப்பு உள்ளது தானே. மேலும் பயிற்சியில் நீங்கள் விக்கெட்டை இழந்தாலும் அதற்கு அடுத்த பந்தை உங்களால் விளையாட முடியும், ஆனால் பயிற்சி ஆட்டங்களில் உங்களால் அதுபோல் விளையாட முடியாது. மேலும் பந்துவீச்சாளர்களும் எந்த லைன் மற்றும் லெந்த் பந்து வீசுகிறார்கள் என்பதும் முக்கியம். அதனை உண்மையான போட்டியில் மட்டுமே உங்களால் பெற முடியும்” என விமர்சித்துள்ளார்.