இந்தியாவில் இந்தாண்டு அக்டோபர் 5ஆம் தேதி ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. அதன்பின் நேற்றைய தினம் அனைத்து அணிகளும் தங்களுடை உலகக்கோப்பை அணியை அரிவித்தனர். 

Advertisement

அதேசமயம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வீரராக விளையாடி வரும் விராட் கோலி பல்வேறு போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்துள்ளார்.

Advertisement

அதுமட்டுமின்றி அவரது ஆக்ரோஷமான அணுகுமுறை இந்திய அணியும் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றது. தற்போதுள்ள இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியிலும் விராட் கோலி சீனியர் வீரராக முன்னின்று சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஐசிசி கோப்பையை கைப்பற்றாமல் இருக்கும் இந்திய அணி இம்முறை ஒருநாள் உலகக் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை நேற்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்க்கர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் வெளியிட்டிருந்த வேளையில் இந்த உலகக் கோப்பை தொடரை வெல்வதில் விராட் கோலி முக்கிய பங்கினை வகிப்பார் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “விராட் கோலி இந்திய அணியில் இருப்பது அணியில் உள்ள வீரர்களுக்கு கூடுதலான உத்வேகத்தை தரும். ஏனெனில் விராட் கோலி ஏற்கனவே 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றுள்ளார். எனவே மீண்டும் ஒருமுறை இரண்டாவது முறையாக உலககோப்பையை வெல்லும் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற பசியுடன் காத்திருக்கிறார்.

அதோடு இந்த உலகக் கோப்பை தொடரில் அவர் ரன் குவிக்கும் பசியோடு இருப்பதாலும் இந்த உலகக் கோப்பை வெல்ல அவர் இளம் வீரர்களுக்கு ஒரு மோட்டிவேட்டராக இருப்பார். அவரது செயல்பாடு நிச்சயம் இந்திய அணி கோப்பையை வெல்ல உதவும்” என தெரிவிதுள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News