இவர்களை துணைக்கேப்டனாக நியமித்திருக்கலாம் - சுனில் கவாஸ்கர்!

Updated: Mon, Jun 26 2023 12:11 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களான புஜாரா, உமேஷ் யாதவ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டு இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் முகேஷ் குமார் உள்ளிட்ட வீரர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அடைந்த தோல்வியே சீனியர் வீரர்கள் நீக்கத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்திய அணியில் சீனியர் வீரர்கள் இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதால், இளம் வீரர்களை தயார் செய்ய வேண்டிய நிலையும் பிசிசிஐக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அஜிங்கியா ரஹானேவை பிசிசிஐ துணை கேப்டனாக நியமித்துள்ளது.

இது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ரஹானேவை துணை கேப்டனாக நியமனம் செய்ததை தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால் இளம் வீரர்களுக்கு அந்த வாய்ப்பினை கொடுத்திருக்க வேண்டும். பேட்டிங், பவுலிங்கை கடந்து கேப்டன்சியிலும் இளம் வீரர்களுக்கு அனுபவத்தை கொடுக்க வேண்டும்.

துணை கேப்டனாக நியமிக்கும் போது அவர்களால் கேப்டனுடன் அதிகமாக உரையாட முடியும். என்ன மாதிரியான ஃபீல்ட் செட் வைப்பது, எந்த வீரருக்கு எந்த பவுலர்களை பயன்படுத்துவது என்று குறித்த திட்டங்களை உருவாக்குவது போன்றவற்றை கற்றுக் கொள்வார்கள். என்னை பொறுத்தவரை இருவரை துணை கேப்டனாக நியமித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஷுப்மன் கில் மற்றும் அக்சர் படேல் இருவரும் துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஷுப்மன் கில் உலகத்தரம் வாய்ந்த வீரராக உருவாகி வருகிறார். அதேபோல் அக்சர் படேல் தனது ஆட்டத்தை பற்றி அதிகம் சிந்தித்து அதில் முன்னேற்றம் கண்டு வருகிறார். இருவரையும் துணை கேப்டனாக நியமித்திருந்தால், அவர்களுக்கும் நல்ல அனுபவம் கிடைத்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை