ஐபிஎல் 2025: உமேஷ் யாதவின் சாதனையை முறியடித்த சுனில் நரைன்!

Updated: Wed, Apr 16 2025 12:53 IST
Image Source: Google

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று சண்டிகரில் நடைபெற்றது. சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆர் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் மிக குறைந்த ஸ்கோரை டிபென்ட் செய்த முதல் அணி எனும் சாதனையையும் பஞ்சாப் கிங்ஸ் பெற்றுள்ளது. இதுதவிர்ந்து இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியானது 4அவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன் நடப்பு சீசன் புள்ளிப்பட்டியலிலும் 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேற்கொண்டு இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட யுஸ்வேந்திர சஹால் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியில் கேகேஆர் அணி தோல்வியைத் தழுவினாலும் அந்த அணியின் நட்சத்திர வீரர் சுனில் நரைன் சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி இப்போடியில் சுனில் நரைன் 2 விக்கெட்ட்களை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். அவர் பஞ்சாப் கிங்ஸிற்கு எதிராக 36 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தை பிடித்துள்ளார்.

முன்னதாக இந்த பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 35 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்த நிலையில், அதனைத் தற்போது வெஸ்ட் இண்டீஸின் சுனில் நரைன் முறியடித்து அசத்தியுள்ளார். மேற்கொண்டு இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் டுவைன் பிராவோ மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 33 விக்கெட்டுகளை இந்த பட்டியலின் மூன்றாம் இடத்தில் உள்ளார். 

ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள்

  • 36 - சுனில் நரைன் vs பஞ்சாப் கிங்ஸ்
  • 35 - உமேஷ் யாதவ் vs பஞ்சாப் கிங்ஸ்
  • 33 - டுவைன் பிராவோ vs மும்பை இந்தியன்ஸ்
  • 33 - மோஹித் சர்மா vs மும்பை இந்தியன்ஸ்
  • 33 - யுஸ்வேந்திர சாஹல் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • 32 - யுஸ்வேந்திர சாஹல் vs பஞ்சாப் கிங்ஸ்
  • 32 புவனேஷ்வர் குமார் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இப்போட்டி குறித்து பேசினால், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரப்ஷிம்ரன் சிங் 30 ரன்களையும், பிரியான்ஷ் ஆர்யா 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணியானது 15.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேகேஆர் தரப்பில் ஹர்ஷித் ரானா 3 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Also Read: Funding To Save Test Cricket

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய கேகேஆர் அணி எளிதான வெற்றியைப் பதிவுசெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பஞ்சாப் கிங்ஸின் அபாரமான பந்துவீச்சின் காரணமாக அந்த அணி 15.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் வெறும் 95 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய யுஸ்வேந்திர சஹால் 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சென் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை