ஐபிஎல் 2021: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Wed, Sep 29 2021 15:09 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 44ஆவது லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திலுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, முதலிடத்திலிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இதில் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியும், ஹைதராபாத் பிளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறியும் உள்ளதால் இப்போட்டியின் மீதான சுவாரஸ்யம் சற்று குறைந்து தான் காணப்படுகிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் -சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
  • இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம்
  • நேரம் -இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் விளையாடி 10 போட்டியில் 8-ல் வெற்றிபெற்று பிளே ஆஃப் சுற்றுக்கான இடத்தை உறுதிசெய்துள்ளது. 

மேலும் அணியின் பேட்டிங், பவுலிங் என சம பலத்துடன் சிஎஸ்கே இருப்பதால், இனிவரும் போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடர்ந்து புள்ளிப்பட்டியலின் முதலிடத்தில் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி நடப்பு சீசனில் இதுவரை வெளையாடிய 10 போட்டியில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று, பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

அதனால் அந்த அணியின் மூத்தவீரர்களுக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு விளையாட வாய்ப்புகள் வழங்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நேருக்கு நேர்

  • மோதிய ஆட்டங்கள் - 15
  • ஹைதராபாத் வெற்றி - 4
  • சிஎஸ்கே வெற்றி - 11

உத்தேச அணி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ஜேசன் ராய், விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன் (கே), ப்ரியம் கார்க், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஸ்வர் குமார், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா.

சென்னை சூப்பர் கிங்ஸ் - ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, எம்எஸ் தோனி (கே), ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - எம்எஸ் தோனி
  • பேட்டர்ஸ் - ஃபாஃப் டு பிளெஸிஸ், ருதுராஜ் கெய்க்வாட், ஜேசன் ராய், கேன் வில்லியம்சன்
  • ஆல் -ரவுண்டர்கள் - மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, ஜேசன் ஹோல்டர்
  • பந்துவீச்சாளர்கள் - ஷர்துல் தாக்கூர், ரஷித் கான், சந்தீப் சர்மா.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை