ஐபிஎல் 2022 தொடரின் 21ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - குஜராத் டைட்டன்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
  • இடம் - டிஒய் பாட்டீல் மைதானம், மும்பை
  • நேரம் - இரவு 7.30 மணி
Advertisement

போட்டி முன்னோட்டம்

ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை பொறுத்தவரை அறிமுக அணி என்று சொல்ல முடியாத அளவுக்கு அபாரமாக விளையாடி வருகிறது.இதுவரை விளையாடிய 3 போட்டிகளையும் வென்று அசத்தியுள்ளது குஜராத். சேஸிங் செய்யும்போதும் சரி, டிபண்ட் செய்யும்போதும் சரி, விட்டுக்கொடுக்கும் எண்ணத்திற்கே இடம் கொடுக்காமல் கடுமையாக போராடி வெற்றியை பெறுகிறது குஜராத்.

பேட்டிங்கை பொறுத்தவரை அட்டகாச பார்மில் இருக்கும் சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். இக்கட்டான சூழல் தரும் அழுத்தத்தை எல்லாம் ஒரு பொருட்டாக மதிக்காமல், அபாரமாக விளையாடும் ராகுல் தெவாட்டியா குஜராத்துக்கு கூடுதல் பலம். தமிழக வீரர் சாய் சுதர்சனும் பேட்டிங்கில் கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடி இருந்தார். 

பந்துவீச்சில் ரஷித் கான், முகமது ஷமி, ஃபர்குஷன் என பலம் வாய்ந்த பவுலர்களை வைத்து எதிரணியின் பேட்டிங்கை துவம்சம் செய்கிறது குஜராத். பெரிய மெனக்கெடல் எதுவும் இல்லாமல், தன் இயல்பான பார்மை அந்த அணி வெளிப்படுத்தினாலே சன் ரைசர்ஸை எளிதாக சாய்த்து விட முடியும்.

Advertisement

மறுபக்கம் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணி தொடர்ச்சியான தோல்விகளுக்கு பிறகு ஒருவழியாக வெற்றிப்பாதைக்கு சமீபத்தில் தான் திரும்பியது. ராஜஸ்தான், லக்னோ அணிகளுக்கு எதிராக படுதோல்வியை தழுவிய அந்த அணி, சென்னை அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்றது. அதே வெற்றிப் பயணத்தை தொடரும் முனைப்பில் இந்த ஆட்டத்திலும் சன் ரைசர்ஸ் களமிறங்கும். 

பார்முக்கு வராமல் இருந்த அபிஷேக் ஷர்மாவும் கேன் வில்லியன்சனும் சென்னை அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியது அந்த அணிக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது. ஐடன் மார்க்ரம், ராகுல் திரிபாதி, நிக்கோலஸ் பூரான் ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கிறார்கள். 

உம்ரான் மாலிக், நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பவுலிங்கில் சிறப்பான நிலையில் உள்ளனர். புவனேஷ்வர் குமாரும் சிறப்பாக பந்துவீசும் பட்சத்தில் குஜராத் பேட்டிங் லைன் அப்பிற்கு கடும் போட்டியை அளிக்க இயலும். அனைவரும் ஒருங்கிணைந்து சிறப்பாக விளையாடும்போது மட்டுமே பலம் வாய்ந்த குஜராத் அணியை வீழ்த்த இயலும். 

Advertisement

உத்தேச அணி

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் : அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கே), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஷஷாங்க் சிங், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக்/ கார்த்திக் தியாகி, டி நடராஜன்.

குஜராத் டைட்டன்ஸ் : மேத்யூ வேட், ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கே), டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, அபினவ் மனோகர், ரஷித் கான், லாக்கி பெர்குசன், முகமது ஷமி, தர்ஷன் நல்கண்டே.

Advertisement

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - நிக்கோலஸ் பூரன்
  • பேட்டர்ஸ் - ஐடன் மார்க்ரம், ராகுல் திரிபாதி, ஷுப்மான் கில்
  • ஆல்-ரவுண்டர்கள் - வாஷிங்டன் சுந்தர், ஹர்திக் பாண்டியா, ராகுல் திவேத்தியா
  • பந்துவீச்சாளர்கள் - டி நடராஜன், ரஷித் கான், முகமது ஷமி, லாக்கி ஃபர்குசன்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News