ஐபிஎல் 15 ஆவது சீசனுனில் இன்று நடைபெறும் ஐந்தாவது லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற உள்ளது.

Advertisement

 இரு அணிகளுக்கும் கடந்த சீசன் சரியாக அமையவில்லை. புள்ளிபட்டியலில் கடந்த சீசனில் இந்த அணிகள் கடைசி இரண்டு இடங்களை தான் பிடித்திருந்தது. இதனால் நடப்பு சீசனை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் 
  • இடம் - மஹாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம், புனே
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோடம் 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தில், வார்னருக்கு பிறகு கேப்டன்ஸி பொறுப்பேற்றுள்ள கேன் வில்லியம்சன் இதற்கு முன்னரே தனது கேப்டன்ஸியை நிரூபித்துள்ளார். 

மேலும் அந்த அணியில் நிக்கோலஸ் பூரன், ஐடன் மார்க்ரம் மற்றும் கேன் ஆகியோர் பேட்டிங்கிலும், மார்கோ ஜான்சன், புவனேஸ்வர், நடராஜன், உம்ரான் மாலிக், கார்த்திக் தியாகி ஆகியோர் வேகப்பந்து வீச்சிலும், ஸ்ரேயாஸ் கோபால் மற்றும் வாஷிங்டன் சுந்தர் சுழற்பந்து வீச்சிலும் அணியை வலுவாக கட்டமைக்கின்றனர். 

Advertisement

அப்துல் சமத், பிரியம் கர்க் மற்றும் அபிஷேக் ஷர்மா போன்ற இந்திய திறமைகளும் இங்கு திறமையாக செயல்பட முடியும்.

இந்த சீசனிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சஞ்சு சாம்சன் தான் தொடர்ந்து வழிநடத்துவார். ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் பாடிக்கல் மற்றும் ஷிம்ரோன் ஹெட்மியர் ஆகியோர் இந்த சீசனில் ராஜஸ்தான் அணியில் சிறப்பாக பேட்டிங் செய்ய கூடியவர்களாக உள்ளார்கள். 

ரவி அஸ்வின், சாஹல் மற்றும் கே.சி கரியப்பா ஆகியோர் சுழற் பந்துவீச்சையும், ட்ரெண்ட் போல்ட், நவ்தீப் சைனி, நேத்தன் குல்டர் நைல் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் வேகப்பந்து வீச்சுலும் உள்ளதால் அணி பலமாக தெரிகிறது.

Advertisement

நேருக்கு நேர்: 

  • மோதிய போட்டிகள் - 15
  • சன்ரைசர்ஸ் வெற்றி - 8
  • ராஜதஸ்தான் வெற்றி - 7

உத்தேச லெவன்:

எஸ் ஆர் எச்: அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, கேன் வில்லியம்சன் (கே), ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், அப்துல் சமத், ரொமாரியா செஃபெர்ட், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்/ டி நடராஜன், ஸ்ரேயாஸ் கோபால்/ ஜெகதீசா சுஜித்.

Advertisement

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கே ), ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், நாதன் கவுல்டர்-நைல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், நவ்தீப் சைனி.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், நிக்கோலஸ் பூரன்
  • பேட்டர்ஸ் - ஷிம்ரோன் ஹெட்மையர், ராகுல் திரிபாதி, அப்துல் சமத்
  • ஆல்-ரவுண்டர்கள் - ரொமாரியோ ஷெஃப்பெர்ட், ஐடன் மார்க்ரம்
  • பந்துவீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சாஹல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News