விராட் கோலிக்காக உலகக்கோப்பையை வெல்லுங்கள் - சுரேஷ் ரெய்னா!

Updated: Sun, Oct 17 2021 15:49 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பையின் 7ஆவது சீசன் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் கோலாகலமாக தொடங்கியுள்ளது. 

இதில் இன்று நடைபெற்றுவரும் முதல் போட்டியில் ஓமன் - பப்புவா நியூ கினியா அணிகள் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. அதேசமயம் நாளை நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. 

இந்நிலையில், நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்திய கேப்டன் விராட் கோலி தனது கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இதனால் விராட் கோலிக்காக உலககோப்பையை வெல்ல வேண்டுமென முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதுகுறித்து பேசிய சுரேஷ் ரெய்னா, “ஐசிசி டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கான எனது செய்தி எளிதான ஒன்று. அது விராட் கோலிக்காக உலகக்கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும், ஏனேனில் அவர் இத்தொடரில் தனது கடைசி கேப்டன்சியை ஏற்கவுள்ளார். அதனால் அவருக்காக இந்த உலகக்கோப்பையை வென்றுகொடுங்கள். அவருக்காக இதை செய்வது மிகவும் முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை