மீண்டும் களமிறங்கும் சுரேஷ் ரெய்னா; இம்முறை கிரிக்கெட்டின் அடுத்த வடிவத்தில்!

Updated: Tue, Nov 01 2022 21:38 IST
Image Source: Google

கிரிக்கெட்டின் அடுத்த வடிவமான சூப்பர் 10 லீக் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இந்த டி10 லீக் தொடரின் நடப்பானடு சீசன் துபாயில் வரும் நவம்பர் 23ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. இதற்காக, அனைத்து அணிகளும் வீரர்களை ஒப்பந்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன.

டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி ஆண்ட்ரே ரஸல், நிகோலஸ் பூரன், ஜேசன் ராய், டஸ்கின் அகமது, ஓடியன் ஸ்மித், முஜிப் உர் ரஹ்மான் போன்ற ஸ்டார் வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், அந்த அணி  தற்போது இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவையும் ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுரேஷ் ரெய்னா கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி ஐபிஎல் போன்ற உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வினை அறிவித்தார். இவர் அடுத்து பிக்பேஷ் லீக், கரீபியன் லீக் போன்ற டி20 தொடர்களில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது டி10 லீக்கில் அவர் விளையாட உள்ளது, அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

 

இந்திய அணிக்காக பல அபார ஆட்டத்தையும், அவ்வபோது அணியை வழிநடத்தவும் செய்த சுரேஷ் ரெய்னா மொத்தம் 18 டெஸ்ட், 226 ஒருநாள், 78 டி20 போட்டிகளில் பங்கேற்று, தலா 768, 5,615, 1,604 ரன்களை அடித்துள்ளார். 

அதேபோல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் லையன்ஸ் அணிகளுக்காக இதுவரை 205 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 5,528 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார். இவரை மிஸ்டர் ஐபிஎல் என ரசிகர்கள் இன்றுவரை அன்போடு அழைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை