ஐசிசி டி20 தரவரிசை: முதலிடத்தை நோக்கி முன்னேறும் சூர்யா!

Updated: Wed, Oct 05 2022 16:18 IST
Suryakumar Yadav Mere 16 Points Away From #1 Ranked T20I Batter Mohammad Rizwan In ICC Rankings (Image Source: Google)

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் சூர்யகுமார் யாதவ். இவரின் 176 ஸ்ட்ரைக் ரேட் மற்ற அணிகளை பீதியடை வைத்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் 2 அரைசதம் விளாசினார். முதல் போட்டியில் 50 ரன்களும் 2ஆவது போட்டியில் 61 ரன்களும் அடித்து இருந்தார்.

டி20 போட்டியில் தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையிலும் முன்னேறி கொண்டே வருகிறார். ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் முதல் 10 இடங்களில் இருக்கும் ஒரே இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தான். சூர்யகுமார் யாதவ் 838 புள்ளிகள் உடன் 2ஆவது இடத்தில் உள்ளார். 

பாகிஸ்தான் தொடக்க வீரர் ரிஸ்வான் 854 புள்ளிகள் உடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ரிஸ்வானுக்கும் சூர்யகுமார் யாதவ்க்கும் 16 புள்ளிகள் மட்டுமே வித்தியசம் உள்ளது. டி20 உலகக்கோப்பை இந்த இரு வீரர்களில் யார் தங்களது அதிரடியை தொடர்கிறார்களோ அவர்கள் முதலிடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. 

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 801 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளார். மற்ற இந்திய வீரர்களில் கேஎல் ராகுல், விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா முறையே 14, 15, 16 இடங்களில் உள்ளனர். டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை அக்டோபர் 23-ம் தேதி எதிர்கொள்ள உள்ளது.

 

கடந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானிடம் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். மேலும் இத்தொடரில் சிறப்பாக செயல்படும் வீரரே முதலிடத்தை பிடிப்பார்கள் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை