நான் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை - சூர்யகுமார் யாதவ்!

Updated: Wed, Jan 22 2025 08:59 IST
Image Source: Google

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணி சமீபத்தில்அறிவிக்கப்பட்டது. இதில் அணியின் கேப்டனாக ரோஹித் சரமா நீடிக்கும் நிலையில், அணியின் துணைக்கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன், கருண் நாயர், வருண் சக்ர்வர்த்தி உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேபோல் இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் யாதவும் ஒருநால் அணியில் இடம்பெறவில்லை. 

இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இடம்பெறாத நிலையில், ஒருநாள் போட்டிகளில் சரியாக விளையாட முடியாதது வருத்தமளிப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாதது எனக்கு ஏன் வருத்தமளிக்க வேண்டும். நான் சரியாக விளையாடியிருந்தால், இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடித்திருப்பேன்.

நான் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். தற்போது தேர்வு செய்யப்பட்டிருக்கும் அணியில் உள்ள அனைவர்ம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கூடியவர்கள்.மேலும், அவர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்கள். அவர்களை நினைத்து எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஒருநாள் போட்டிகளில் நன்றாக செயல்பட்டிருந்தால், நான் அணியில் இருந்திருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு நடந்து முடிந்த ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய சூர்யகுமார் யாதவ் அத்தொடரில் பெரிதளவில் சோபிக்க தவறினார். மேலும் இறுதிப்போட்டியில் அவர் விளையாட வேண்டிய தருணத்திலும், எதிரிலிருந்து பந்துவீச்சாளருக்கு ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்ச சம்பவத்திற்காக இதுநாள் வரை ரசிகர்களின் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறார். 

Also Read: Funding To Save Test Cricket

இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் சூர்யகுமார் யாதவ், ஒருநாள் போட்டிகளில் சோபிக்க தவறிவருவது அவரது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்து வருகிறது. இதுவரை இந்திய அணிக்காக 37 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் அதில் 773 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அதேசமயம் டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் 4 சதங்களுடன் 2570 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை