ஐபிஎல் 2025: சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் கேப்டனாக செயல்படும் சூர்யகுமார் யாதவ்!

Updated: Wed, Mar 19 2025 13:22 IST
Image Source: Google

எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும், ஐபிஎல் தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மார்ச் 23ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும்தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியை மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.முன்னதாக கடந்தாண்டு ஐபிஎல் தொடரின் போது ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி படுதோல்விகளைச் சந்தித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டிருந்தது.

அதேசமயம் அந்த அணி ஒரு சில போட்டிகளில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சீசனில் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு மூன்று முறை அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.  இதனையடுத்து அந்த தொடர்ச்சியாக இதே தவறை செய்ததன் காரணமாக அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவிற்கு ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணி லீக் சுற்றுடன் வெளியேறியதன் காரணமாக, இந்த சீசனின் முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாட தடைவிதிக்கப்படும் என்பதால், அவரால் சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்ததன் காரணமாக, ஹர்திக் பாண்டியா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியா மீது நம்பிக்கை வைத்து அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை கொடுத்தது. இதனால் சூர்யகுமார் யாதவ் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

Also Read: Funding To Save Test Cricket

மும்பை இந்தியன்ஸ்: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா, ரோஹித் சர்மா, திலக் வர்மா, டிரென்ட் போல்ட், நமன் திர், ராபின் மின்ஸ், கரன் சர்மா, ரியான் ரிக்கெல்டன், தீபக் சாஹர், முஜீப் உர் ரஹ்மான்*, வில் ஜாக்ஸ், அஷ்வனி குமார், மிட்செல் சான்ட்னர், ரீஸ் டாப்லி, ஸ்ரீஜித் கிருஷ்ணன், ராஜ் அங்கத் பாவா, வெங்கட் சத்யநாராயண ராஜு, பெவோன் ஜேக்கப்ஸ், அர்ஜுன் டெண்டுல்கர், லிசாத் வில்லியம்ஸ், விக்னேஷ் புத்தூர், சூர்யகுமார் யாதவ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை