இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடர், கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இலங்கை அணி ஓமன் சென்று, அந்த அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. மேலும் அதே அணி டி20 உலகக்கோப்பை தொடரிலும் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அணியில் ஒரு சில வீரர்கள் காயமடைந்துள்ளதால், மேலும் ஐந்து வீரர்களை இலங்கை கிரிக்கெட் வாரியம் அணியில் சேர்த்துள்ளது. அதன்படி பாத்தும் நிசங்க, மினோத் பானுகா, அஷேன் பண்டாரா, லக்ஷன் சண்டகன், ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் அவர்கள் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இலங்கை அணியில் விளையாடுவார்களா என்பது தெரியவில்லை. ஏனெனில் டி20 உலகக்கோப்பை தொடருக்காக ஒவ்வொரு அணியும் 15 மற்றும் 3 கூடுதல் வீரர்களை மட்டுமே அறிவிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி: தாசுன் ஷனகா (கே), தனஞ்சய டி சில்வா, குசால் பெரேரா, தினேஷ் சண்டிமால், அவிஷ்கா ஃபெர்னாண்டோ, பானுக ராஜபக்ச, சரித் அசலங்கா, வனிந்து ஹசரங்கா, கமிந்து மென்டிஸ், சாமிகா கருணாரத்ன, நுவான் பிரதீப், துஷ்மந்த சமீரா, பிரவீன் ஜெயவிக்ரமன மகேஷ் நிசங்க, மினோத் பானுகா, அஷேன் பண்டாரா, லக்ஷன் சண்டகன் மற்றும் ரமேஷ் மெண்டிஸ்.
ரிசர்வ் வீரர்கள்: லஹிரு குமார, பினுரா ஃபெர்னாண்டோ, அகில தனஞ்சய, புலின தரங்கா.