டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 14ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
Advertisement
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கம் முதலே இங்கிலாந்து பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Advertisement
அதிலும் கிறிஸ் கெயிலைத் தவிர மற்ற எந்த வீரரும் இரட்டை இலக்க ரன்களைத் தாண்டவில்லை. இதனால் 14.2 ஓவர்களிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்களை மட்டுமே சேர்த்தது.
Also Read: டி20 உலகக் கோப்பை 2021
இங்கிலாந்து அணி தரப்பில் ஆதில் ரஷித் 4 விக்கெட்டுகளையும், டைமல் மில்ஸ், மொயின் அலி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.