டி20 உலகக்கோப்பை: பந்துவீச்சாளர்கள் அபாரம்; 143 ரன்னில் சுருண்டது விண்டீஸ்!
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்றுவரும் 18ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி லிண்டல் சிம்மன்ஸ் - எவின் லூயிஸ் இணை ஆரம்பம் முதலே நிதான ஆட்டத்தை தொடர்ந்தது. இதில் எவின் லூயிஸ் அரைசதம் கடந்து அசத்தினார்.
அதன்பின் எவின் லூயிஸ் 56 ரன்களுடன் ஆட்டமிழக்க, லிண்டல் சிம்மன்ஸும் 16 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய கிறிஸ் கெயில், நிக்கோலஸ் பூரான் ஆகியோரும் 12 ரன்களில் வெளியேறினர்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் பொல்லார்ட் சற்று அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களைச் சேர்த்தது.
Also Read: டி20 உலகக் கோப்பை 2021
அந்த அணியில் அதிகபட்சமாக எவின் லூயிஸ் 56 ரன்களைச் சேர்த்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் டுவைன் பிரிட்டோரியஸ் 3 விக்கெட்டுகளையும், கேஷவ் மஹாராஜ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.