ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடர் இன்று தொடங்கியது. இதன் முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் ஓமன் - பப்புவா நியூ கினியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் கேப்டன் அசாத் வாலா சிறாப்பாக விளையாடி அரைசதம் கடந்தார்.
இதன்மூலம் 20 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அசாத் வாலா 56 ரன்களைச் சேர்த்தார். ஓமன் அணி தரப்பில் கேப்டன் ஸிஷான் மஹ்சூத் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய ஓமன் அணிக்கு அகிப் இலியாஸ் - ஜதிந்தர் சிங் இணை ஆபாரமான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் இருவரும் அரைசதம் கடந்தது மட்டுமில்லாமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இதன்மூலம் ஓமன் அணி 13.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியாவை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜதிந்தர் சிங் 73 ரன்களையும், அகிப் இலியாஸ் 50 ரன்ன்களையும் சேர்த்தனர்.