டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 4ஆவது தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை - நமீபியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசியது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய நமீபியா அணி தீக்‌ஷனா பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 19.3 ஓவர்களிலேயே அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

Advertisement

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய இலங்கை அணியில் பதும் நிஷங்கா 5, குசால் பெரேரா 11, தினேஷ் சண்டிமல் 5 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த அவிஷ்கா ஃபெர்னாண்டோ - பனுக்கா ராஜபக்க்ஷ இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றிபெற செய்தது. 

இதன்மூலம் 13.3 ஓவர்களிலேயே இலங்கை அணி இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ராஜபக்க்ஷ 42 ரன்களுடனும், அவிஷ்கா ஃபெர்னாண்டோ 30 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News