டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
Advertisement
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு மார்டின் கப்தில், டேரி மிட்செல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். பின் 30 ரன்களில் கப்தில் ஆட்டமிழக்க, 33 ரன்களில் மிட்செலும் விக்கெட்டை இழந்தார்.
Advertisement
அதன்பின் களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் அதிரடியாக விளையாடி 37 ரன்களைச் சேர்த்தார். இறுதியில் ஜேம்ஸ் நீஷம் தனது பங்கிற்கு 18 பந்துகளில் 31 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேன் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.