டி20 உலகக்கோப்பை 2022: ஐந்து நிமிடத்தில் விற்றுத்தீர்த்த இந்தியா - பாகிஸ்தான் டிக்கெட்!

Updated: Tue, Feb 08 2022 13:56 IST
T20 WC 2022: India-Pak match tickets sold out within five minutes of going on sale (Image Source: Google)

ஐசிசியின் 7ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.

இதில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.

இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் உள்ளன. தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் தகுதி சுற்றில் இருந்து 2 அணிகள் ஆகியவை அந்த பிரிவில் இடம்பெற்று உள்ளன.

இந்நிலையில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 23ஆம் தேதி மெல்போர்னில் நடக்கிறது.

இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்று விற்பனை செய்யப்பட்டது. பொது மக்களுக்காக வினியோகிக்கப்பட்ட இந்த டிக்கெட்டுகள் 5 நிமிடத்திலேயே விற்று தீர்ந்து விட்டன. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை