பவுண்டரி எல்லையில் அசத்தலான கேட்சை பிடித்த சிராஜ் - வைரலாகும் காணொளி!

Updated: Wed, Jun 12 2024 22:38 IST
பவுண்டரி எல்லையில் அசத்தலான கேட்சை பிடித்த சிராஜ் - வைரலாகும் காணொளி! (Image Source: Google)

அமெரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை லீக் போட்டியானது நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அமெரிக்க அணியில் ஷயான் ஜஹாங்கீர் முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஆண்ட்ரிஸ் கௌஸும் 2 ரன்கள் எடுத்த நிலையில் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் களமிறங்கிய கேப்டன் ஆரோன் ஜோன்ஸும் 11 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பிய நிலையில், மற்றொரு தொடக்க வீரரான ஸ்டீவன் டெய்லரும் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த நிதீஷ் குமார் மற்றும் கோரி ஆண்டர்சன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் நிதீஷ் குமார் 27 ரன்களையும், கோரி ஆண்டர்சன் 15 ரன்களையும் சேர்த்தனர். 

அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் யாரும் பெரிதாக சோபிக்காத நிலையில், அமெரிக்க அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களை வீசி 9 ரன்களை மட்டுமே கொடுத்த நிலையில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேலும் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

இதையடுத்து இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய வீரர் முகமது சிராஜ் பிடித்த கேட்ச் குறித்த காணொளியானது ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதன்படி இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய நிதீஷ் குமார் சிக்ஸர் அடிக்க முயற்சித்து மிட் ஆன் திசையில் தூக்கி அடிக்க, அதனை பவுண்டரி எல்லையில் இருந்த சரியாக கணித்த சிராஜ் தாவி பந்தை பிடித்து அசத்தினார். இந்நிலையில் சிராஜின் இந்த கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை