ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: ஆஃப்கானை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்துமா இந்தியா?

Updated: Thu, Jun 20 2024 11:01 IST
Image Source: Cricketnmore

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை  கிரிக்கெட் தொடரானது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இதிலிருந்து எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்  இந்திய அணியை எதிர்த்து, ஆஃப்கானிஸ்தான் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளிலும் அதிரடியான வீரர்கள் நிறைந்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இவ்விரு அணிகளின் உத்தேச லெவன் மற்றும் இப்போட்டிகான ஃபேண்டஸி லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

இந்திய அணி

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளைப் பதிவுசெய்து, தோல்வியையே தழுவாமல் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இதனால் சூப்பர் 8 சுற்றிலும் சிறப்பாக விளையாடுவதுடன், அடுத்தடுத்த சுற்றுக்கு முன்னேறும் முயற்சியில் இந்திய அணி இறங்கியுள்ளது. 

இந்தியை அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் நடப்பு உலகக்கோப்பை தொடர் கெட்ட கனவாகவே அமைந்துள்ளது. எனெனில் இந்திய அணிக்கான லீக் போட்டிகள் அனைத்து அமெரிக்காவில் நடைபெற்ற காரணத்தால் பேட்டிங் வரிசையானது சிறப்பாக செயல்படாமல் தடுமாறியுள்ளது. இருப்பினும் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்கள் இருப்பது அணியின் பேட்டிங் வலிமையைக் கட்டுக்கிறது. 

மறுபக்கம் பந்துவீச்சை பொறுத்தவரையில் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களுடன் முகமது சிராஜ், அக்ஸர் படேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இருந்தாலும் அவர்கள் பெரிதளவில் பங்களிக்க தவறியுள்ளனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் நிச்சயம் பந்துவீச்சு துறையில் ஒருசில மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 இந்தியா உத்தேச லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல்/குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்/ யுஸ்வேந்திர சஹால்.

ஆஃப்கானிஸ்தான் அணி

ரஷித் கான் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணியும் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளது. லீக் சுற்றின் முதல் மூன்று போட்டிகளில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய ஆஃப்கானிஸ்தான் அணியானது, தங்களுடைய கடைசி லீக் போட்டியில் வெஸ்ட் இண்டிஸிடம் படுதோல்வியைச் சந்தித்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது. 

இதனால் அந்த அணி இப்போட்டியை கூடுதல் கவனத்துடன் எதிர்கொள்ளும் என எதிர்பார்கக்ப்படுகிறது. அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ரஹ்மனுல்லா குர்பாஸ் மிக முக்கிய வீரராக உள்ளார். அவருக்கு துணையாக இப்ராஹிம் ஸத்ரான், முகமது நபி, அஸ்மதுல்லா ஒமர்ஸாய், நஜிபுல்ல ஸத்ரான் ஆகியோருடன், வாய்ப்பிற்காக காத்திருக்கும் ஹஸ்ரதுல்லா ஸஸாயும் இருப்பது அணியின் பேட்டிங் வலிமையைக் கட்டுகிறது. 

மறுபக்கம் பந்துவீச்சை எடுத்துக்கொண்டால் ஃபசல்ஹக் ஃபரூக்கி, நவீன் உல் ஹக் ஆகியோருடன் அஸ்மதுல்லா ஒமர்ஸாயும் வேகப்பந்துவீச்சில் கைகொடுத்து வருகிறார். மேற்கொண்டு ரஷித் கான், நூர் அஹ்மத் மற்றும் முகமது நபி போன்று உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களும் இருப்பது அணியில் கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இதனால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்கான என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் உத்தேச லெவன்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், குல்பாதின் நைப், அஸ்மத்துல்லா ஒமர்சாய், நஜிபுல்லா ஸத்ரான், முகமது நபி, கரீம் ஜனத், ரஷித் கான் (கேப்டன்), நூர் அகமது, நவீன் உல் ஹக், ஃபசல்ஹாக் ஃபரூக்கி.

AFG vs  IND T20 World Cup Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த், ரஹ்மானுல்லா குர்பாஸ் (துணைக்கேப்டன்)
  • பேட்ஸ்மேன்கள் - ரோஹித் சர்மா, விராட் கோலி, 
  • ஆல்ரவுண்டர் - ஹர்திக் பாண்டியா (கேப்டன்), அஸ்மத்துல்லா ஒமர்சாய், முகமது நபி
  • பந்துவீச்சாளர்கள் - ஜஸ்பிரித் பும்ரா, ரஷித் கான், அர்ஷ்தீப் சிங், ஃபசல்ஹக் ஃபரூக்கி.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை