அமெரிக்கா இனியும் சிறிய அணி கிடையாது - தென் ஆப்பிரிக்க வீரர்களை எச்சரிக்கும் மார்க்ரம்!

Updated: Wed, Jun 19 2024 12:29 IST
அமெரிக்கா இனியும் சிறிய அணி கிடையாது - தென் ஆப்பிரிக்க வீரர்களை எச்சரிக்கும் மார்க்ரம்! (Image Source: Google)

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டின் தொடரின் 9ஆவது சீசன் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் லீக் சுற்று போட்டிகள் இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில்,  இந்தியா ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட 8 அணிகள் முன்னேறியுள்ளன.

அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெறும் குரூப் 2 பிரிவில் இடம்பிடித்துள்ள அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பு உலகக்கோப்பை  கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் இவ்விரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளது. அதிலும் குறிப்பாக முதல் முறையாக டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இடம்பிடித்துள்ள அமெரிக்கா அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிப்பெற்றுள்ளது. 

அதன்படி குருப் ஏ பிரிவில் இடம்பிடித்திருந்த அமெரிக்க அணியானது தங்களுடைய முதல் போட்டியில் கனடா அணியையும், இரண்டாவது போட்டியில் வலிமை வாய்ந்த பாகிஸ்தான் அணியையும் வென்று அசத்தியது. அதன்பின் இந்திய அணிக்கு எதிரான போட்டியிலும் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்திய நிலையிலும், இறுதிக்கட்டத்தில் தோல்வியைத் தழுவியது. இதன் காரணமாக அமெரிக்க அணியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் அமெரிக்க அணி இனியும் கத்துக்குட்டி அணி கிடையாது என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அமெரிக்க அணி உண்மையிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர். அவர்களை நிறைய பேர் 'சிறிய நாடு' என்று சொல்வார்கள், ஆனால் அவர்கள் இனியும் தாங்கள் கத்துக்குட்டி அணி கிடையாது என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

எனவே, அவர்களுக்கு எதிராக நாங்கள் வெற்றிபெற வேண்டுமெனில், எங்களுடைய 100 சதவீத உழைப்பை கொடுத்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். இதன் காரணமாக அந்த சவாலுக்காக நான் உற்சாகமாக இருக்கிறேன். நிச்சயம் அமெரிக்க அணிக்கு எதிராக நாங்களை வெற்றியைப் பதிவுசெய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை