ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்வது யார்? இந்தியா - அமெரிக்கா அணிகள் இன்று மோதல்!

Updated: Wed, Jun 12 2024 10:45 IST
Image Source: Google

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது பதிப்பு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 20 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் லீன் சூற்று போட்டிகள் நிறைவடைய உள்ள நிலையில் எந்த 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன, நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களில் நீடித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக இரு அணிகளும் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றியைப் பதிவுசெய்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளின் கணிப்பட்ட பிளேயிங் லெவன் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். 

இந்திய அணி

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நடப்பு சீசனில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக இவ்விரு வெற்றியையும் பேட்டிங்கிற்கு கடினமான நசாவ் கவுண்டி சர்வதேச மைதானத்திலே பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த மைதானத்திலேயே தங்களது மூன்றாவது லீக் போட்டியிலும் இன்று விளையாட உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்ற உத்வேகத்துடன் இப்போட்டியில் விளையாடவுள்ளது. 

அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே, ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் இருந்தாலும், இதில் பெரும்பாலானோர் சோபிக்க தவறியுள்ளனர். அதிலும் ஷிவம் தூபே விளையாடிய இரண்டு போட்டிகளிலும் பேட்டிங்கில் சொதப்பியதுடன் ஃபீல்டிங்கிலும் கேட்சுகளை தவறவிட்டுள்ளது விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் இடம்பெற அதிகவாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஜஸ்ப்ரித் பும்ரா அணியின் துருப்புச்சீட்டாக செயல்பட்டுவருகிறார். அதிலும் குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபாரமாக பந்துவீசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்ததுடன் ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தியுள்ளார். அவருக்கு துணையாக ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஸர் படேல் ஆகியோரும் பந்துவீச்சில் அசத்திவருவது அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. 

இந்தியா உத்தேச லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், சிவம் துபே/சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

அமெரிக்கா அணி (யுஎஸ்ஏ)

மறுபக்கம் மொனாங்க் படேல் தலைமையிலான அமெரிக்க அணியும் நடப்பு உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று வலிமையான அணிகளுக்கு சவால் விடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சூப்பர் ஓவர் வரை சென்றதுடன், சூப்பர் ஓவரில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

அந்த அணியின் பேட்டிங்கைக் பொறுத்தவரையில் ஸ்டீவன் டெய்லர், மொனாங்க் படேல், ஆண்ட்ரீஸ் கௌஸ், ஆரோன் ஜோன்ஸ், நிதிஷ் குமார், கோரி ஆண்டர்சன், ஹர்மீத் சிங் ஆகியோர் இருப்பது அணியின் பலமாக பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆரோன் ஜோன்ஸ் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறார். 

அதேசமயம் அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் இந்தியாவிற்கு அண்டர் 15 தொடரில் விளையாடி தற்போது அமெரிக்க அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவருக்கு துணையாக அலி கான், கோரி ஆண்டர்சன், ஜஸ்தீப் சிங், நோஸ்துஷ் கென்சிகே உள்ளிட்டோரும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை வழங்கி வருவது அணியின் பலமாக பார்க்கப்படுகிறது. இதனால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

அமெரிக்கா உத்தேச லெவன்: ஸ்டீவன் டெய்லர், மொனாங்க் படேல் (கேப்டன் ), ஆண்ட்ரீஸ் கௌஸ், ஆரோன் ஜோன்ஸ், நிதிஷ் குமார், கோரி ஆண்டர்சன், ஹர்மீத் சிங், ஜஸ்தீப் சிங், நோஸ்டுஷ் கென்சிகே, சௌரப் நேத்ரவால்கர், அலி கான்.

USA vs IND T20 World Cup Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த், மொனாங்க் படேல்
  • பேட்ஸ்மேன்கள் - ரோஹித் சர்மா, விராட் கோலி, ஆரோன் ஜோன்ஸ்
  • ஆல்ரவுண்டர் - ஹர்திக் பாண்டியா (கேப்டன்), அக்ஸர் படேல்
  • பந்துவீச்சாளர்கள் - ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), முகமது சிராஜ், சௌரவ் நேத்ராவால்கர், அர்ஷ்தீப் சிங்.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை