டி20 உலகக்கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்!

Updated: Fri, Oct 29 2021 19:27 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 23ஆவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசியது.

அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ரோஸ்டன் சேஸ், நிக்கோலஸ் பூரன் ஆகியோரது நிதான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 40 ரன்களையும், ரோஸ்டன் சேஸ் 39 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் மெஹிதி ஹசன், முஸ்தபிசூர் ரஹ்மான், சொரிஃபுல் இஸ்லாம் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

அதன்பின் இலக்கை துரத்திய வங்கதேச அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ஷாகிப் அல் ஹசன் 9 ரன்களுடனும், முகமது நைம் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய சௌமியா சர்க்கார் 17, முஷ்பிக்கூர் ரஹிம் 8 என ஆட்டமிழக்க, வங்கதேச அணி தடுமாறியது. 

பின்னர் லிட்டன் தாஸ் - மஹ்முதுல்லா இணை அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். இதில் அரைசதம் கடப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லிட்டன் தாஸ் 44 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

இதனால் வங்கதேச அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இதனால் இப்போட்டியில் யார் வெற்றிபெற்று தொடரில் நீடிப்பார் என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டது. 

இறுதியில் கடைசி ஓவரை வீசிய ஆண்ட்ரே ராஸ்ஸல் அபாரமாக பந்துவீசி 9 ரன்களை மட்டுமே கொடுத்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 5 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்களை மட்டுமே எடுத்தது. 

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இத்தோல்வியின் மூலம் வங்கதேச அணி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான அரையிறுதி வாய்ப்பை தவறவிட்டது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை