டி20 உலகக்கோப்பை: ஸாம்பா பந்துவீச்சில் 73 ரன்களில் சுருந்தது வங்கதேசம்!
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்றுவரும் 34ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். இதனால் அந்த அணி தொடக்கம் முதலே ரன்களை குவிக்க தடுமாறியது.
அதன்பின் ஆஸ்திரேலிய அணியின் ஆடம் ஸாம்பா பந்துவீச்சை எதிகொள்ள முடியாமல் வங்கதேச அணி வீரர்கள் திணறினர். இதனல் 15 ஓவர்களிலேயே வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 73 ரன்களை மட்டுமே சேர்த்தது.
Also Read: T20 World Cup 2021
ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஸாம்பா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மேலும் மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹசில்வுட் ஆகியோரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.