டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 36ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - நமீபியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
Advertisement
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி கிளென் பிலீப்ஸ் - ஜேம்ஸ் நீஷம் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைச் சேர்த்தது.
Advertisement
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிளென் பிலீப்ஸ் 39 ரன்களையும், நீஷம் 35 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து களமிறங்கிய நமீபியா அணி ஆரம்பம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களை மட்டுமே சேர்த்தது.
Also Read: T20 World Cup 2021
இதன் மூலம் நியூசிலாந்து அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
Advertisement