டி20 உலகக்கோப்பை: நமீபியா பந்துவீச்சில் தடுமாறிய நியூசிலாந்து; கைகொடுத்த பிலீப்ஸ் - நீஷம் ஜோடி!
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்றுவரும் 36ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியினர் தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் மார்டின் கப்தில் 18 ரன்னிலும், டேரில் மிட்செல் 19 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 28 ரன்னிலும், டேவன் கான்வே 17 ரன்னிலும் வெளியேறி அதிர்ச்சியளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த கிளென் பிலிப்ஸ் - ஜேம்ஸ் நீஷம் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Also Read: T20 World Cup 2021
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 163 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிளென் பிலீப்ஸ் 39 ரன்களையும், ஜேம்ஸ் நீஷம் 35 ரன்களையும் சேர்த்தனர்.