டி20 உலகக்கோப்பை: நஜிபுல்லா அரைசதம்; நியூசிக்கு 125 ரன்கள் இலக்கு!

Updated: Sun, Nov 07 2021 17:07 IST
T20 WC 40th Match: New Zealand restrict Afghanistan by 124 runs (Image Source: Google)

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்றுவரும் 40ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் முகமது ஷசாத், ஹஸ்ரதுல்லா ஸஸாய், ரஹ்மனுல்லா குர்பாஸ், குலாப்தின் நைப் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த நஜிபுல்லா சத்ரான் - முகமது நபி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது.  இதில் நஜிபுல்லா சத்ரான் அரைதம் காந்து அசத்தினார் 

அதன்பின் முகமது நபி 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிம் சௌதி பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து 73 ரன்கள் சேர்த்திருந்த நஜிபுல்லா சத்ரானும் ட்ரெண்ட் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

Also Read: T20 World Cup 2021

அதைத்தொடர்ந்து வந்த வீரர்களும் சரிவர சோபிக்காததால், 20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தன் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிபட்சமாக நஜிபுல்லா சத்ரான் 73 ரன்களைச் சேர்த்தார். நியூசிலாந்து அணி தரப்பில் ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை