டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 41ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Advertisement

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி பாபர் ஆசாம், சோயிப் மாலிக்கின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களைச் சேர்த்தது. 

Advertisement

இதில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் ஆசாம் 66 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சோயிப் மாலிக் 54 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து கடின இலக்கை துரத்திய ஸ்காட்லாந்து அணி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அந்த அணியின் முன்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ரிச்சி பெர்ரிங்டன் மட்டும் நின்று விளையாடி ஸ்கோர் செய்தார். இதில் 34 பந்துகளில் அரைசதம் கடந்தும் அசத்தினார். 

Also Read: T20 World Cup 2021

Advertisement

இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணியால் 117 ரன்களை மட்டுமே சேர்க்கமுடிந்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி தொடர்ச்சியாக 5ஆவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News