‘என்ன ஒரு மோசமான ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்’ வார்னரை சாடிய கம்பீர்!

Updated: Fri, Nov 12 2021 14:36 IST
T20 WC: Ashwin backs Gambir's take on Warner's 'double-bounce' six against Pakistan (Image Source: Google)

ஆஸ்திரேலியா அணி 177 ரன்கள் இலக்கை விரட்டிய போது டேவிட் வார்னர் 8ஆவது ஓவரில் இந்த ஷாட்டை அடித்தார். முகமது ஹபீஸ் வீசிய பந்து ஒன்று இருமுறை பிட்ச் ஆனது, அது உண்மையில் பவுலர் கையிலிருந்து தவறுதலாக வந்தது. பொதுவாக அம்மாதிரி பந்தை யாரும் அடிக்க மாட்டார்கள், அப்படி அடிக்காமல் விட்டால் நடுவரும் அதை டாட் பால் என்றோ நோ-பால் என்றோ கூறலாம். 

ஆனால் இது நோ-பால் ஆனதோடு வார்னர் அதை விடாமல் விரட்டிப் போய் சிக்ஸ் விளாசினார். இப்படி சிக்ஸ் அடித்ததோடு நடுவரும் நோ-பால் என்றதால் ஃப்ரீ ஹிட்டும் கிடைத்தது. இந்த வீடியோ வைரலாக நெட்டிசன்களிடையே, குறிப்பாக மீம் மாஸ்டர்களின் கற்பனைகளை தூண்டி விட்டது. 

Also Read: T20 World Cup 2021

ஆனால் கவுதம் கம்பீர், இது ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் அல்ல என்று வார்னரை சாடியுள்ளார். “என்ன ஒரு மோசமான ஆட்டம், என்ன ஒரு மோசமான ஸ்பிரிட் ஆஃப் தி கேம் வார்னர்! வெட்கக்கேடு” என்று வாசகமிட்டு அஸ்வினையும் டேக் செய்து அவரது கருத்தையும் கேட்டுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை