இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடரானது, கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரக, ஓமனில் நடைபெற்று வருகிறது.
Advertisement
இதில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய அணி, வருகிற 24ஆம் தேதி அன்று பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதற்காக இருநாட்டு வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, பயிற்சியின் போது பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசினார்.
Advertisement
Also Read: டி20 உலகக் கோப்பை 2021
மகேந்திர சிங் தோனி இந்திய அணி பேட்டர்களும் த்ரோடவுன் முறையில் பந்துவீசிய புகைப்படங்களை பிசிசிஐ தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது அப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.