ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் டெரில் மிட்செல் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜோஷ் ஹசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த மார்ட்டின் கப்தில் - கேப்டன் கேன் வில்லியம்சன் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார்ட்டின் கப்தில், ஆடம் ஸாம்பா வீசிய பந்தை சிக்சர் அடிக்க முயற்சித்து ஸ்டோய்னிஸ்டம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அதன்பின் அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுத்த கேன் வில்லியம்சன் எதிரணி பந்துவீச்சை மைதானத்தின் அனைத்து திசைக்களுக்கும் பறக்கவிட்டாதோடு அரைசதம் கடந்தும் அசத்தினார். இதனால் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
அவருடன் இணைந்து விளையாடி வந்த கிளென் பிலீப்ஸ் 18 ரன்னில் வெளியேற, மறுமுனையில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேன் வில்லியம்சன் 85 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹசில்வுட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய டிம் செய்ஃபெர்ட், ஜிம்மி நீஷம் இணை சில பவுண்டர்களை விளாசி அணிக்கு வலுவான ஸ்கோரை நிர்ணயித்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 172 ரன்களைக் குவித்தது.
Also Read: T20 World Cup 2021
இதில் அதிகபட்சமாக நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியசம்சன் 85 ரன்களைச் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜோஷ் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடவுள்ளது.