டி20 உலகக்கோப்பை: இங்கி., ஆஸி.,வுடன் பயிற்சி போட்டியில் விளையாடும் இந்தியா!

Updated: Sat, Sep 18 2021 12:35 IST
T20 WC: India Team to play practice match against England and Australia!
Image Source: Google

இந்தியாவில் நடத்தப்பட இருந்த ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதிவரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ளது. 

இதில் இந்திய அணி அக்டோபர் 14ஆம் தேதியன்று பாகிஸ்தான் அணியுடன் முதல் போட்டியை விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணி, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணியுடன் பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி அக்டோபர் 18ஆம் தேதி இங்கிலாந்துடனும், அக்டோபர் 20ஆம் தேதி ஆஸ்திரேலியாவுடனும் இந்தியா பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடவுள்ளதால், இப்பயிற்சி போட்டிகள் நடத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை