டி20 உலகக்கோப்பை: நிறைய சாவல்கள் காத்திருக்கின்றன - கேன் வில்லியம்சன்

Updated: Fri, Oct 15 2021 13:09 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடரின் ஏழாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 17ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், இந்த உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு நிறைய சவால்கள் காத்திருப்பதாக அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய வில்லியம்சன், “இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் நாங்கள் முன்னேற நிறைய சவால்கள் உள்ளன. அதாவது உலகக்கோப்பை தொடரின் ஒவ்வொரு போட்டியும் கடினமானதாக இருக்கும். ஏனெனில் ஓவ்வொரு அணியிலும் போட்டி வெற்றியாளர்கல் உள்ளன.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

அதனால் அனைத்து அணிகளும் வெல்வதற்கு தகுதியானவர்களே. இதன் காரணமாக எங்கள் அணி வீரர்கள் கூடுதல் திறனை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். அதற்கான மாற்றங்களை செய்யவும் நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை