டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்திற்கு 164 ரன்கள் இலக்கு!

Updated: Wed, Oct 20 2021 17:33 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீசியது. 

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரரான ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்ததோடு அணியின் ஸ்கோரை யும் உயர்த்தினர். 

அவருக்கு உதவியாக ஜானி பேர்ஸ்டோவ் 30 ரன்களையும், சாம் பில்லிங்ஸ் 27 ரன்களையும் சேர்த்தனர். இதமூலம் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களைச் சேர்த்தது. 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 70 ரன்களைச் சேர்த்தார். நியூசிலாந்து அணி தரப்பில் இஷ் சோதி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை