டி20 உலகக்கோப்பை: ஸ்மித், ஃப்ரைலிங்கின் இறுதிநேர அதிரடி; இலங்கைக்கு சவாலான இலக்கு!
எட்டாவது சீசன் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் சௌத் கீலாங்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இதில் குரூப் ஏ பிரிவு முதல் ஆட்டத்தில் இலங்கை - நமீபிய அணிகள் மோதுகின்றன.
நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நமீபியா அணி பவர்பிளே ஓவர்களான முதல் 4 ஓவர்களுக்கு 24 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஜான் நிக்கோல் - ஸ்டீபர் பார்ட் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படித்தி ஸ்கோரை உயர்த்தியதுடன், சிறுது பார்ட்னர்ஷிப்பையும் அமைத்தனர். அதன்பின் 20 ரன்கள் எடுத்த ஜான் நிக்கோல் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் எராஸ்மஸ் 20 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் டேவிட் வீசா சந்தித்த முதல் பந்திலேயே தீக்ஷனாவிடம் விக்கெட்டை இழந்து அதிர்ச்சியளித்தார்.
அதனைத்தொடர்ந்து மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்டீபர் பார்ட் 26 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஜான் ப்ரைலிங் - ஜேஜே ஸ்மித் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் நமீபியா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஜான் ஃப்ரை லிங் 28 பந்துகளில் 44 ரன்களையும், ஜேஜே ஸ்மித் 16 பந்துகளில் 31 ரன்களையும் சேர்த்து அசத்தினர். இலங்கை தரப்பில் மதுஷன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.