சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் கேஷவ் மஹாராஜ்!

Updated: Mon, Aug 18 2025 20:15 IST
Image Source: Google

Australia vs SouthA Africa 1st ODI: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையடும் தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் கேஷவ் மஹாராஜ் சிறப்பு சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்னாப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை வென்றது.இதையடுத்து ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா இடையேயான ஒருநாள் தொடரானது நாளை தொடங்கவுள்ளது. நாளை கெய்ர்ன்ஸில் உள்ள கசாலி கிரிக்கெட் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி நடைபெறவுள்ளது.

இதில் ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி டி20 தொடரை வென்ற உத்வேகத்துடன் இந்த தொடரை எதிர்கொள்கிறது. மறுபக்கம் தென்னாப்பிரிக்க அணி டி20 தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடனும் விளையாடவுள்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றன. 

மேலும் இந்த ஒருநாள் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் குவேனா மபாகா சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் நாளை நடைபெறும் முதல் ஒருநாள் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் அறிமுக வீரர் டெவால்ட் பிரீவிஸ் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த போட்டியின் மூலாம் தென்னாப்பிரிக்க வீரர் கேஷவ் மஹாராஜ் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். 

தென்னாப்பிரிக்க அணிக்காக கடந்த 2016ஆம் ஆண்டு அறிமுகமான கேஷவ் மஹாராஜ் இதுவரை 59 டெஸ்ட், 48 ஒருநாள் மற்றும் 39 டி20 போட்டிகளில் விளையாடி 186 இன்னிங்ஸ்களில் மகாராஜ் 299 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் இந்த போட்டியில் அவர் மேலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தும் பட்சத்தில், தென்னாப்பிரிக்காவின் 136 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் சுழற்பந்து வீச்சாளர் எனும் சாதனையைப் படைக்கவுள்ளார்.

இதுதவிர்த்து இந்த மைல் கல்லை எட்டும் எட்டாவது தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெறுவார். தென்னாப்பிரிக்காவுக்காக இதுநாள் வரை ஷான் பொல்லாக், டேல் ஸ்டெய்ன், மக்காயா நிடினி, ஆலன் டொனால்ட், ககிசோ ரபாடா, ஜாக் காலிஸ் மற்றும் மோர்ன் மோர்கெல் ஆகியோர் மட்டுமே இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளனர். இதில் அனைவருமே வேகப்பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்காவுக்காக அதிக சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர்கள்

  • கேசவ் மகாராஜ் - 299 விக்கெட்டுகள்
  • இம்ரான் தாஹிர் - 291 விக்கெட்டுகள்
  • நிக்கி போஜே - 196 விக்கெட்டுகள்
  • ஹக் டேஃபீல்ட் - 170 விக்கெட்டுகள்
  • தப்ரைஸ் ஷம்சி - 168 விக்கெட்டுகள்
Also Read: LIVE Cricket Score

தென்னாப்பிரிக்க அணி: டெம்பா பவுமா (கேப்டன்), கார்பின் போஷ், மேத்யூ பிரீட்ஸ்கே, டெவால்ட் பிரீவிஸ், நந்த்ரே பர்கர், டோனி டி ஸோர்ஸி, ஐடன் மார்க்ராம், குவேனா மபாகா, செனுரான் முத்துசாமி, கேசவ் மகாராஜ், வியான் முல்டர், லுங்கி இங்கிடி, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், பிரெனலன் சுப்ரயன்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை