AUS vs SA 1st ODIDream11 Prediction: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்னாப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை வென்றது.

Advertisement

இதையடுத்து ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா இடையேயான ஒருநாள் தொடரானது நாளை தொடங்கவுள்ளது. நாளை கெய்ர்ன்ஸில் உள்ள கசாலி கிரிக்கெட் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி டி20 தொடரை வென்ற உத்வேகத்துடன் இந்த தொடரை எதிர்கொள்கிறது. மறுபக்கம் தென்னாப்பிரிக்க அணி டி20 தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடனும் விளையாடவுள்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

AUS vs SA: Match Details

  • மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்கா
  • இடம் - கசாலி கிரிக்கெட் மைதானம், கெய்ர்ன்ஸ்
  • நேரம்- ஆகஸ்ட் 19, காலை 10 மணி (இந்திய நேரப்படி)

AUS vs SA: Live Streaming Details

தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வர்க்கில் நேரலையில் காணலாம்.

AUS vs SA: Head-to-Head in ODIs

  • Total Matches: 110
  • Australia: 51
  • South Africa: 55
  • No Result: 3
  • Tied: 1

AUS vs SA: Ground Pitch Report

கெய்ர்ன்ஸில் உள்ள கசாலி கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது. இதில் 5 ஒருநாள் போட்டிகளில் 2 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 3 முறை சேஸிங் செய்த அணிகளும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 189 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 267 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலம்.

Advertisement

AUS vs SA: Possible XIs

Australia: டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஷாக்னே, மிட்செல் மார்ஷ் (கேப்டன்), கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, கூப்பர் கோனொலி, ஜோஷ் இங்கிலிஸ், பென் துவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

South Africa: மேத்யூ பிரீட்ஸ்கீ, டெம்பா பவுமா (கேப்டன்), ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டன், டெவால்ட் ப்ரீவிஸ், வியான் முல்டர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கார்பின் போஷ், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி

AUS vs SA: Dream11 Team

  • Wicket-keepers: ரியான் ரிக்கெல்டன், அலெக்ஸ் கேரி
  • Batters: மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், டெம்பா பவுமா, டெவால்ட் பிரீவிஸ்
  • All-rounders: வியான் முல்டர், கேமரூன் க்ரீன்
  • Bowlers: காகிசோ ரபாடா, ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்
Advertisement

AUS vs SA 1st ODI Dream11 Prediction, AUS vs SA Dream11 Prediction, Today's Match AUS vs SA, AUS vs SA Prediction, AUS vs SA Dream11 Team, Fantasy Cricket Tips, AUS vs SA Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Australia vs South Africa

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News