ஆசிய கோப்பை 2025: கணிக்கப்பட்ட இந்திய அணி; ராகுல், ஜெய்ஸ்வாலுக்கு இடமில்லை!
India Likely Squad for Asia Cup 2025: வரவுள்ள ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணைக்கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசிய கிரிக்கெட் சங்கத்தில் சார்பில் ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கும் ஒருமுறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாள், ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் விளையாடுவது வழக்கம். மேலும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை நடைபெறும் போது இத்தொடரானது ஒருநாள் வடிலும், டி20 உலகக்கோப்பை தொடரின் போது டி20 வடிவிலும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் நடப்பு ஆசிய கோப்பை தொடரானது டி20 வடிவில் எதிவரும் செப்டம்பர் மாதம் முதல் நடைபெறவுள்ளது. அந்தவகையில் இந்தாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது யுஏஇ-ல் எதிர்வரும் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி, இறுதிப்போட்டியானது செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.
அதேசமயம், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதில் இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தையும், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானையும் எதிர்த்து விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி ஆகஸ்ட் 19, 20ஆம் தேதிகளில் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்து சில தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன்படி அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹார்திக் பாண்ட்யா ஆகியோர் தங்கள் இடங்களை தக்கவைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இது தவிர,இந்திய அணியின் மிகவும் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவும் இத்தொடரில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.
இதுதவிர்த்து அணியின் இரண்டாவது வீரருக்கான தேர்வில் துருவ் ஜூரெல், ஜித்தேஷ் சர்மா ஆகியோரும், மாற்று வேகப்பந்து வீச்சாளராக பிரஷித் கிருஷ்ணா, ஹர்ஷித் ரானா ஆகியோரிடையேயும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. அதேசமயம் இந்த அணியில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல் ஆகியோர் இடம்பிடிக்க மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இத்தொடருக்கான இந்திய அணியின் துணைக்கேப்டனாக ஷுப்மன் கில் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோரிடையே கடும் போட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் அக்ஸர் படேல் கடந்த இங்கிலாந்து தொடரில் துணைக்கேப்டனாக செயல்பட்டார். அதே நேரத்தில் ஷுப்மன் கில் சமீபத்தில் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இதனால் இதில் யார் அணியின் துணைக்கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன.
Also Read: LIVE Cricket Score
ஆசியக் கோப்பை தொடருக்கான கணிக்கப்பட்ட இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹார்திக் பாண்ட்யா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா/பிரசித் கிருஷ்ணா, ஜிதேஷ் சர்மா/துருவ் ஜூரெல்.